அவளைக்காட்டு!
=============================================ருத்ரா
அவளை நான் உங்களுக்கு
காட்டமுடியாது.
முகம் எப்படி?
மூக்கு எப்படி?
கண்கள் எப்படி?
என்றெல்லாம் படம் காட்ட
முடியாது.
உன் காதலியை
நாங்கள் பார்க்கமுடியாதா?
அது ஏன் அப்படி?
கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்.
அப்புறம் எப்படி பார்ப்பது?
சரி
வாருங்கள் காட்டுகிறேன்.
இருவரும் அந்த வாய்க்கால் பாலத்தின்
சுவரில் உட்கார்ந்து கொண்டோம்.
அது அந்தி வேளை.
மேற்கு திசையின் விளிம்பை
அவன் சுட்டிக்காட்டினான்.
அங்கே மேகச்சிதறல்கள்.
சூரியனின் தூரிகை மிச்ச வர்ணக்குழம்பை
அங்கே இறைந்து வைத்திருந்தது.
அதோ பார்த்தீர்களா! என்றான்.
ஆம் மனைதை மயக்குகிறதப்பா!
நேரத்துக்கு நேரம் அந்த
வண்ணத்தீற்றல்கள்
மாறிக்கொண்டே இருகின்றனவே.
ஓ! இது தான்
உன் அவள் முகத்தோற்றங்களா?
அடடே!
அரைகுறையாய் மூடியும் திறந்துமான
அவள் இமையோரங்கள்
அங்கே விளிம்பு கட்டி நிற்கின்றனவே.
ஒளித் திரட்சி செம்பவளப்பஞ்சுகளாய்
உதடுகள் பிரிந்தது போல்
ஒரு உன்மத்தைத்தை
முத்தமாய் தர
இதோ பாய்ந்து வருகிறதே...
என்னால் முடியவில்லை.
போதும் அப்பா!
நீயும் ஆச்சு! உன் காதலியும் ஆச்சு!
நான் போகிறேன்.
நீ எங்கே நிற்கிறாய்?
எனக்குத் தள்ளாடுகிறது.
ஒரு கை கொடு.
என்னைப்பிடித்துக்கொள்.
........
.............
எங்கே அவனைக்காணோம்?
நான்
தொபுக்கடீர் என்று
அந்த வாய்க்காலில் விழுகிறேன்.
வைரச்சிதறலாய்
அப்போது தான் வந்த நிலவின் ஒளியில்
தண்ணீர்ப்பிழம்பில்
நான்.
==================================================
=============================================ருத்ரா
அவளை நான் உங்களுக்கு
காட்டமுடியாது.
முகம் எப்படி?
மூக்கு எப்படி?
கண்கள் எப்படி?
என்றெல்லாம் படம் காட்ட
முடியாது.
உன் காதலியை
நாங்கள் பார்க்கமுடியாதா?
அது ஏன் அப்படி?
கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்.
அப்புறம் எப்படி பார்ப்பது?
சரி
வாருங்கள் காட்டுகிறேன்.
இருவரும் அந்த வாய்க்கால் பாலத்தின்
சுவரில் உட்கார்ந்து கொண்டோம்.
அது அந்தி வேளை.
மேற்கு திசையின் விளிம்பை
அவன் சுட்டிக்காட்டினான்.
அங்கே மேகச்சிதறல்கள்.
சூரியனின் தூரிகை மிச்ச வர்ணக்குழம்பை
அங்கே இறைந்து வைத்திருந்தது.
அதோ பார்த்தீர்களா! என்றான்.
ஆம் மனைதை மயக்குகிறதப்பா!
நேரத்துக்கு நேரம் அந்த
வண்ணத்தீற்றல்கள்
மாறிக்கொண்டே இருகின்றனவே.
ஓ! இது தான்
உன் அவள் முகத்தோற்றங்களா?
அடடே!
அரைகுறையாய் மூடியும் திறந்துமான
அவள் இமையோரங்கள்
அங்கே விளிம்பு கட்டி நிற்கின்றனவே.
ஒளித் திரட்சி செம்பவளப்பஞ்சுகளாய்
உதடுகள் பிரிந்தது போல்
ஒரு உன்மத்தைத்தை
முத்தமாய் தர
இதோ பாய்ந்து வருகிறதே...
என்னால் முடியவில்லை.
போதும் அப்பா!
நீயும் ஆச்சு! உன் காதலியும் ஆச்சு!
நான் போகிறேன்.
நீ எங்கே நிற்கிறாய்?
எனக்குத் தள்ளாடுகிறது.
ஒரு கை கொடு.
என்னைப்பிடித்துக்கொள்.
........
.............
எங்கே அவனைக்காணோம்?
நான்
தொபுக்கடீர் என்று
அந்த வாய்க்காலில் விழுகிறேன்.
வைரச்சிதறலாய்
அப்போது தான் வந்த நிலவின் ஒளியில்
தண்ணீர்ப்பிழம்பில்
நான்.
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக