புதன், 20 மார்ச், 2019

ருத்ராவின் கவிதைகள்


ருத்ராவின் கவிதைகள்
===========================================================




காட்டாறு
--------------------------------------------------------

இந்த வானத்தின் மீது
கோபம்.
குப்புற படுத்துக்கொண்டேன்.
இருந்தாலும்
நட்சத்திரங்கள் எனக்கு அடியிலும்
வந்து மொய்த்துக்கொண்டன.
அவற்றிடம் சொன்னேன்
என் கல்லறைக்கு
பூக்கள் தூவ உங்களுக்கு
அத்தனை அவசரமா?
ஓ மனிதனே!
மரணம் தான் உன் எல்லையா?
நாங்கள்
இந்த மண்ணையும் துளையிட்டு
நட்சத்திர விதைகள் ஊன்றி
ஒரு விடியல் வெளிச்சத்தின்
பிரம்மாண்டத்தை உங்களுக்கு
புரியவைக்கப்போகிறோம்.
இதில்
உங்கள் ஜனன மரண கணக்குகளின்
முதுகெலும்பு முறிந்து போய்விடும்.
மானுடம் எனும்
காட்டாறு மட்டும்
பிரபஞ்சத்தின் மொத்த அறிவாய்
பெருக்கெடுத்து ஓடும்.
நம்பிக்கை கொள்.
அதை கடவுளிடம்
நீ கேட்கத்தேவையில்லை.
கடவுள்
உன்னை நம்பி கேள்விகள்
கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
உன் அறிவிடம்
அவரது தொலைந்து போன‌
சாவிக்கொத்துகள் கிடக்கின்றன.
அறிவின் நம்பிக்கையாய்
எழுச்சி கொள் !
ஓ மனிதா எழுச்சி கொள் !

--------------------------------------------------------------ருத்ரா




2 கருத்துகள்:

Rajasubramanian S சொன்னது…

அருமை.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு ராஜா சுப்ரமணியன் அவர்களே

கருத்துரையிடுக