சனி, 9 மார்ச், 2019

ஞானபூமி

ஞானபூமி
============================================ருத்ரா

அந்த புத்தகம் நிறைய‌
சொற்களை எழுத்துக்களை
உமிழ்ந்து தள்ளியிருந்தது.
கடவுளையும் வாழ்க்கையையும்
தட்டாம்பூச்சி தலை வால்
அந்த கண்ணாடிசிறகு
என்று தனித் தனியாக‌
பிய்த்து எறிந்து என்னமோ
சொன்னது.
ஐம்புலன்களையும் அவித்து
எண்ணெய் ஊத்தி விடவேண்டுமாம்.
மனம் சித்தம் அறிவு சித்தனை
எல்லா வழியாகவும்
ஓட்டை ஏற்படுத்திக்கொண்டு
ஒழுகும் தேனை
புறக்கணித்து விடவேண்டுமாம்.
பிறப்பு என்ற பிள்ளையார் சுழியைக்கூட‌
அதன் கொம்போடு முறித்து
தூர எறிந்து விடவேண்டுமாம்.
அப்படியென்றால்
மரண பயம் இல்லாமல்
எல்லாமே
கஞ்சா இல்லாத ஒரு கஞ்சாவனம்
கையில் கிடைக்குமாம்.
ஆனந்தம் பரமானந்தம்
ஆத்ம சுகம் பிரம்ம சுகம்
என்று
கண்கள் செருகிக்கிடக்கலாமாம்.
மலமே மனிதப்பிறவி.
மனிதச்சுவடு இல்லாத‌
ஒரு மயானப்புகையை
ஊமத்தம்பூவில் சுருட்டி
புகைத்துக்கொண்டிருக்கவேண்டும்.
சங்கல்பம் தொலந்து விடவேண்டும்
என்ற‌
சங்கல்பத்துக்கு மட்டும் நீர்வார்த்து
ஸ்லோகங்களில்
ஒலியை எல்லாம் சிரச்சேதம் செய்து
ரத்த ஒழுக்கில்
காய்ந்து போகவேண்டும்.
இந்த ஈ எறும்புகள்
இந்த உலகத்தை வைத்துக்கொள்ளட்டும்
விட்டு விட்டு விடுங்கள்.
யோக வாரிஷ்டம்
பிரம்ம சூத்திரம்
பதஞ்சலி சூத்திரம்
மற்றும் ஆபஸ்தம்ப ஆரண்யக
சூத்திரங்கள்..
இரைச்சல் கிளப்பிக்கொண்டே இருக்கட்டும்.
அதற்கு
மில்லியன் கணக்கில் கேசட்டுகள்
நன்கொடையில்
இந்த உலகத்துக்குப்பைத்தொட்டியில்
குவிந்து கிடக்கின்றன.
பிதுர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்க‌
மட்டும்
கங்கைகளும் ராமேஸ்வரங்களும்
சடலங்களால் நிரம்பி வழியட்டும்.
ஓம்!
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஹி

================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக