சனி, 30 மார்ச், 2019

"கருப்பு வெள்ளையில்" நயன் தாரா ("ஐரா")


"கருப்பு வெள்ளையில்" நயன் தாரா ("ஐரா")
===================================================ருத்ரா


நயன் தாராவின் இரட்டை வேடம்
அவரது கதாநாயக உயரத்தைந
இன்னும் ஒன்றிரண்டு
இமயமலைகளுக்கு மேல்
கொண்டுபோய் விட்டது.
கருப்பு என்றால்
சமுதாயத்தின் நசுங்கிபோன‌
அடித்தட்டு என்றும்
வெள்ளையே தெய்வத்துக்கு
முகத்திற்கும் மூக்கிற்கும்
அருகில் வைத்துக்கொண்டு
கொஞ்சப்படும் நிறம் என்றும்
ஒரு தேவா அசுர நினைப்பு
இயக்குனருக்கு எப்படி வந்தது
என்று தெரியவில்லை?
எத்தனையையோ படங்களில்
பார்த்திருக்கிறோம்
ஆவிகள் அல்லது பேய்கள்
வெள்ளையாகத்தான் இருக்கும்.
கள யதார்த்தம்
நம் உலக வரலாற்று ர‌த்தம் சிந்தல்கள்
இன்னும் நம்
புராண அஞ்ஞான அதர்ம யுத்தங்கள்
எல்லாம் இப்படி ஒரு
இரட்டை வேடத்தில் வந்து
முனை கூட்டியிருக்கிறது.
நயன் தாரா அந்த கருப்பின்
நடிப்பில் "வெளுத்து" வாங்கியிருக்கிறார்.
வெள்ளை யமுனாவின் மனத்தின்
அடி ஆழம் அப்படி ஒரு கருப்பாய்
பவானியாய் வந்திருக்கிறாள் என்
நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பவானியின் முகத்தில்
படரும் உணர்வுகள்
மற்றும் அவள் உடல் மொழிகள் எல்லாம்
நயன் தாராவுக்கு நடிப்பில்
நிறைய புதிய மைல்கற்களை
நட்டுகாட்டியிருக்கின்றன.
பேய் என்பது
மனத்துக்கள் கருவுயிர்த்து
மனதையே உடலாக்கி
மனதுக்குள்ளேயே
தன் வக்கிரத்தை கன்னிக்குடம்
உடைத்துக்கொண்டு
பிரசவிக்கும் ஒரு மனக்குழவி.
அதன் அசுரத்தனமான விசுவரூபத்தை
அதன் ஒவ்வொரு மயிர்க்கால்களின்
பயங்கரத்தையும் திகிலையும்
மிக மிக அற்புதமாக
காட்டிருக்கிறார் நயன் தாரா.
வெள்ளை நயன் தாராவோ
பளிச்சென்று ப்ளீச் செய்தது போல்
ஒரு சிறு புன்னகையில் கூட‌
தியேட்டருக்குள் வெளிச்சம்
பாய்ச்சுகிறார்.
அந்தக்காலத்தில்
ஜெயலலிதா அவர்கள்
இந்த மாதிரி இரட்டை வேடத்தில்
ஜெயசங்கருடன் திகில் காட்டி
அதிர வைத்திருக்கிறார்.
ஆனால் நயன் தாராவின்
இந்த இரட்டைவேட நடிப்பில்
வேடம் இரட்டையானாலும்
பல முனைப்பரிமாணங்களில்
தன் நடிப்பை கலைடோஸ்கோப்பு
ஆக்கியிருக்கிறார்.
மற்ற நடிகர்களிடமும்
கலங்கரை வெளிச்சம் போல்
அது சுழன்று சுழன்று
அவரவர் பாத்திரத்து  நடிப்பின்
கூர்மையையும் செறிவையும்
நன்கு காட்டியிருக்கிறது.
கோலமாவு கோகிலா பாணியில்
யோகி பாபு அவர்கள்
சிரிக்க வைக்க முனைந்தாலும்
அதிலும் நயன் தாராவின் பாத்திரமே
துணையாக நிற்கிறது.
இது போன்ற காமெடியைப் பார்த்து
வயிறு குலுங்க சிரிக்கவேண்டுமானால்
"அவ்வை சண்முகி"யில்
மணிவண்ணனும் டெல்லி கணேஷும்
அந்த சண்முகியிடம் செய்யும்
சேட்டைகள்
ஒரு நகைச்சுவைக்கோட்டையாய்
இன்றும்
நின்று கொண்டிருப்பதைப்பார்க்கலாம்.
யோகிபாபு சில்லறை சில்லறையாய்
அல்லது சொட்டு சொட்டாய்
வசனம் உதிர்த்தாலும்
அந்த "டைமிங்க்"தான்
நம்மை சிரித்து ரசிக்க வைக்கிறது.
இதில் கதையை நகர்த்துவதிலும்
அவருக்கு ஒரு பங்கு இருக்கிறது.
பெண் என்றால்  பேயும் இரங்கும்.
ஒரு பெண் இன்னொரு பெண்ணை
பேயாய் வந்து துரத்துவதில்
பெண்ணுக்கும்
பேயாய் ஆகிய பெண்ணுக்கும்
இடையில் ஒரு திடுக்கிடும் பள்ளத்தாக்கு
இருக்கிறது.
ஒரு விதமான  சைக்காலஜிகல் தீம்
வைத்து தைக்கப்பட்டிருக்கிறது இந்த படம்.
இயக்குநர் படத்தோடு
ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி
பயணித்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்!

==================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக