ஞாயிறு, 24 மார்ச், 2019

தேர்தல் ஆற்றுப்படை.(2)

தேர்தல் ஆற்றுப்படை.(2)
====================================ருத்ரா

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

இது வெறும் கீறல் விழுந்த‌
இசைத்தட்டு இல்லைடா!

தமிழன் வீடும்
தமிழன் கூடும்
ஏழுகடல் தாண்டியும்
அலையெறியும்
ஆற்றல்களின்
அளப்பறியா  மூச்சடா!

ஆயிரம் சாமிகள்
கும்பிடுவான்.
ஆயிரம் சாதிகள்
சொல்லிடுவான்.
தமிழை நோக்கி
ஒரு பேய் வருகிறது
என்றால்
தமிழனை விழுங்க‌
ஒரு பிசாசு வருகிறது
என்றால்
தமிழே இங்கு பெரும்புயல்.
தமிழனே இங்கு ஒரு சுநாமி.
எருக்கம்பூ இல்லையடா
தமிழன்
எரிமலைப்பூவடா
எரிமலைப்பூ!

சிந்து வெளி காட்டியது
நம் உயிர்வெளிச்சம்.
சனாதனக்கிடங்கில்
அழுகியவனா
நம் தமிழன்?

வெறும் ஓட்டு இது
இல்லையடா தமிழா!
தமிழ் அழியட்டும்
சமஸ்கிருதம் அழிக்கட்டும்
எனும்
சதிகாரக்கும்பல்களை
விரட்டி அடிக்க‌
வந்ததடா இந்த ஓட்டு.

சின்னக்"கலைஞராய்"த் தமிழ்ச்
சின்னம் மீட்டெடுக்க‌
தெருவெல்லாம்
தமிழ் வெள்ளம் பெருகிவிட‌
சொற்பெருக்காற்றி  புது
வரலாறு படைக்கும்
தளபதி படைக்கு
தயங்காது ஓட்டளிப்பீர்.
தங்கத்தமிழ் காத்திடவே!

==================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக