திங்கள், 1 ஏப்ரல், 2019

ஜெயமோகனின் மண்ணாங்கட்டிகள்.ஜெயமோகனின் மண்ணாங்கட்டிகள்.
====================================================ருத்ரா

சமீபத்தில்
சமஸ் அவர்கள்
புகழ்பெற்ற எழுத்தாளர்
திரு கி.ராஜநாராயணன் அவர்களை
பேட்டி கண்டு
ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
மண்ணின் நாடி நரம்புகளையெல்லாம்
எழுத்துக்குள் பதியம் இட்டவர் "கிரா"
இன்னும் கிராமங்களின்
குட்டிச்சுவர்கள் சேரிகள்
போன்ற ஒதுக்கப்பட்ட இடங்களில்
கூட ஒண்டியிருக்கும்
நம் பாரதபுத்திரர்களை
உற்று நோக்கி
அவர்கள் உள்தாகமாய்
கனன்றுகொண்டிருக்கும்
நெருப்பின் சுவாசங்களை
மிக மிக இயல்பாய் அல்லது
நம் போலி சம்பிராயங்களை
ஒரு வித நையாண்டியோடு எழுதி
இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சில்
சிம்மாசனம் அமைத்து அமர்ந்திருப்பவர்.
ஆனாலும்
அந்த எழுத்தாளர்கள் ஒரு
கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
திராவிடம் அல்லது
பார்ப்பனிய எதிர்ப்பு சார்ந்த‌
எழுத்துக்களோடு
ஒரு தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள்.
ஏன் மிக சிறந்த எழுத்தாளரான‌
ஜெயகாந்தன் கூட‌
தமிழ்ப்பற்றாளர்களை
தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள்
என்று விமர்சித்தார்.
திரை என்றால் பாயும் அலைகள் தானே.
அப்படி திரையிடையே கப்பல் விட்டு
திரைவியம் சேர்த்தவர்கள் தமிழர்கள்.
அவர்களைத்தான் திராவிடர்கள் என்று
கட்டம் கட்டி தாக்குதல் நடத்தினார்கள்
சனாதனிகள் என்று கூறப்பட்ட‌
சாஸ்திர சாணக்கியர்கள்.
ஏன் மகாபாரதத்தில்
துரோணர் அர்ஜுனன் போன்றோருக்கு
வில் வித்தை கற்றுக்கொடுத்ததைக்கவனித்து
அவர்களை விட சிறப்பாக
வில் அம்பு  பயிற்சியை உள்வாங்கிய
அந்த மகதச்சிறுவன்
(அவனும் கூட திராவிடன் என்று
முத்திரை குத்தப்பட்டவனாக இருக்கலாம்)
இந்த ஆரிய புத்திரர்களான
கௌரவ பாண்டவர்களுக்கு
எதிராய் கிளம்பிவிட்டால் என்ன செய்வது
என்று அவன் கட்டைவிரலை
குருதட்சிணையாக பெற்றது தானே
இந்த தந்திரமான பார்ப்பனியம்.
இந்தியாவில் எந்த இடத்தில்
அகழ்வாராய்சசி நடந்தாலும்
திராவிட தொன்மையும்
ஆரிய "வந்தேறி"தன்மையும் தான்
வெளிப்படுவதாக இருக்கின்றன.
அதனால் தான்
"கீழடிகள்" இன்னும் கீழேயே
அமுக்கப்படுகின்றன.
அந்தக்காலத்து
மணிக்கொடி பரம்பரையிலும்
திராவிட வாசனையும்
பார்ப்பனிய எதிர்ப்பும்
நுழையாமல்
அன்றைய பம்மாத்து எழுத்தாளர்கள்
பத்திரமாக பார்த்துக்கொண்டார்கள்.
அப்படியொரு
பம்மாத்து தனம் நிறைந்த
சில மாயாவாத ரசவாத எழுத்தாளர்களால்
தமிழ் என்று பேசிக்கொண்டு
வருகின்றவர்களின் பேனாக்கள்
முறித்துப்போடப்பட்டன.
பொதுவுடைமை சிந்தனையாளர்கள்
இந்த தமிழ் எதிர்ப்பில்
இன்னும் மூர்க்கம் காட்டினார்கள்.
எனவே தான்
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம்
மயிலிறகு போல் வருடி எழுதிக்கொண்டிருந்த
கிரா அவர்களும்
அந்த கோட்டுக்குள்  நின்றார்.
அந்தக்கோடு இப்போது உடைந்து போனது.
அதனால் தான்
கிரா அவர்களும் அப்படி
உடைந்து போக தானும் எழுதாமல்
விட்டு விட்டோமே என்று
ஒரு ஆதங்கம் காட்டியிருக்கிறார்.
அது இந்த மண்ணாங்கட்டிக்கு பொறுக்கவில்லை.
அந்தப்பெரிய இலக்கிய மேதை
"கி ரா" அவர்களையே
தரம் தாழ்ந்து வசை பாடுகிறது.
துணைக்கு
அந்த சனாதனப்   பெரியவாளான
ஜெயமோகன் அவர்களை
தூக்கிப்பிடித்துக்கொண்டு
கொப்பளித்திருக்கிறது.
வேலையில்லாத இளைஞர்களை
பக்கோடா விற்கப்போங்களேன்
என்று கூவியவர் தானே
இவர்களின் பிரதமர்,
அதனால் தான் சமஸ்ஸை
"சமோசா" அது இது என்று
கூவியிருக்கிறார்கள்.
இந்து நாளிதழ் மீது கூட
வாந்தியெடுத்திருக்கிறார்கள்.
வேதங்களில் திராவிடம் பற்றிய
குறிப்பு வந்தால்
அந்த வேதங்களையே
குப்பையில் போடத்  தயங்காத
சனாதனக்குப்பைகள் இவர்கள்.
இவர்களது போலி இந்து மதத்தால்
நடப்பு இந்து மதம்
விரைவில் சமாதிக்குள் போய்விடும்.

=======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக