"குவாண்டம் முட்டை பரோட்டா"
___________________________________________________
குவாண்டம் கம்பியூட்டிங் அதாவது "அளபடை இயக்கவியல் கணினிக்கணிப்புகள் "என்பது மிக மிக நுட்பமான திசைக்கு போய்விட்டது.குவாண்டத்தின் துணுக்கு (க்யூபிட்) என்பது 0 லிருந்து 1 வரை உள்ள சிதறிய சிற்றெண்கள் (ஃப்ராக்ஷன்ஸ்) ஆகும்.இது எத்தனை இருக்கும்? ஒன்றின் கீழ் எல்லையில்லா தொடர் எண்களைப்போட்டு வகுத்துப்பாருங்கள்! அந்தக் கோளம் ஓரு மாயக்கோளமே.(ப்ளாக்ஸ்ஃபேர்).முட்டையின் மஞ்சள் கருவை சூடேற்றி அப்படியொரு முட்டை தோசையில் ஒரு பூதகோளம் உருவாக்கி அதன் வடிவகணிதத்தை (ஜியாமெட்ரியை) கணிப்பது போல் தான் இது.இந்த "கண்ணுக்குத்தெரியாத சுட்ட முட்டை" (ஃபார்பிடன் ஃப்ரைய்ட் எக்) ஒரு சவ்வுக்கோளம் தான்.இதற்கு அவர்கள் பயன்படுத்தும் "குவாஸி குவாண்டம் ஜியாமெட்ரிக் டென்ஸார்) எனும் நுண்ணியல் வடிவகணிதம் ஆகும்.இதன் மூலம் ப்ராபபலிடி டென்சிடி என்பதை வைத்து போக்கு காட்டிக்கொண்டிருக்கும் குவாண்டம் அடியொற்றிச்செல்லும் சுவடுகளைக் கொண்டு மோப்பம் பிடித்து விடலாம் என நினைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வாருங்கள் அந்த முட்டை பரோட்டாவுக்குள் சென்று குவாண்டத்தை ருசிக்கலாம்.
__________________________________________________________________________________
https://www.msn.com/en-us/news/technology/scientists-used-a-forbidden-fried-egg-to-measure-quantum-geometry/ar-AA1xFS0o?ocid=msedgntp&pc=ASTS&cvid=675a00e842714fd5a38484b5f01e221e&ei=15
____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக