நிறுத்தாதே!
________________________________
காலம் சொட்டு சொட்டாய்
என் மீது
விழுந்துகொண்டிருக்கிறது.
இன்று வரை
நீ என்ன என்ன நினைத்தாய்?
உன் சொட்டுகளே
உன் மீது விழுந்துகொண்டிருக்கிறது.
காலம் கூர்மையான
சிந்தனையை உன் மீது
சொட்டுகளாய் சொட்டுகிறது.
அந்த காந்த ஊசிக்கு
ஏற்றவாறு
நீ உன் உள்ளத்தட்டை
சுழலவிடுகிறாயா?
என்பதையே இங்கே
பதிவிடுகிறேன்.
உன் பாட்டின் இசையே
உன் வாழ்க்கை.
பாடு..நன்றாய் பாடு.
மவுனத்தில் கூட நீ பாடு.
காலத்தைக்கண்டு
ஏன் அச்சம்?
உன்னோடு டூயட் பாடத்தான்
இந்த காலத்துக்கும் ஆசை.
இந்த காலக்கிறுக்கல்கள் கூட
உன் கவிதை தான்.
சரி இப்போது
பிடி உன் பேனாவை.
காலத்தின் உயிர்விழுதுகள்
உன் எழுத்துக்களில்
ஊஞ்சல் ஆடுகின்றன.
எழுதும் வரை எழுது.
பாடும் வரை பாடு.
உன் உள்ளத்து மெழுகுவர்த்தி
எரியும் வரை எரியட்டும்.
அது உருகாதது.
அந்தச் சுடர் உன் முறுவல்.
இதை அணைக்க எந்த புயலுக்கும்
வலு இல்லை.
சுடர்ந்து கொண்டே இரு.
உன் ஒலி எனக்கு
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அது நீண்டு கொண்டே இருப்பது தான்
அது உன்னிடம் இருப்பதன்
அடையாளம்.
வேண்டாம்.
உனக்கு முற்றுப்புள்ளியே வேண்டாம்.
எழுதிக்கொண்டே இரு.
உன் பின்னால் தான்
இந்த அண்டம் கூட
அடியெடுத்து வைக்கிறது.
உன் சொல் உதிர்ப்பில்
இதோ சூரிய மகரந்தங்கள்.
இருளை விரட்டிக்கொண்டே....வரும்படி
எழுது.
எழுதுவதை நிறுத்தாதே..
அந்த மாயப்பின்னணி இசை
என்னை
பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
___________________________________________________________
சொற்கீரன்
________________________________
காலம் சொட்டு சொட்டாய்
என் மீது
விழுந்துகொண்டிருக்கிறது.
இன்று வரை
நீ என்ன என்ன நினைத்தாய்?
உன் சொட்டுகளே
உன் மீது விழுந்துகொண்டிருக்கிறது.
காலம் கூர்மையான
சிந்தனையை உன் மீது
சொட்டுகளாய் சொட்டுகிறது.
அந்த காந்த ஊசிக்கு
ஏற்றவாறு
நீ உன் உள்ளத்தட்டை
சுழலவிடுகிறாயா?
என்பதையே இங்கே
பதிவிடுகிறேன்.
உன் பாட்டின் இசையே
உன் வாழ்க்கை.
பாடு..நன்றாய் பாடு.
மவுனத்தில் கூட நீ பாடு.
காலத்தைக்கண்டு
ஏன் அச்சம்?
உன்னோடு டூயட் பாடத்தான்
இந்த காலத்துக்கும் ஆசை.
இந்த காலக்கிறுக்கல்கள் கூட
உன் கவிதை தான்.
சரி இப்போது
பிடி உன் பேனாவை.
காலத்தின் உயிர்விழுதுகள்
உன் எழுத்துக்களில்
ஊஞ்சல் ஆடுகின்றன.
எழுதும் வரை எழுது.
பாடும் வரை பாடு.
உன் உள்ளத்து மெழுகுவர்த்தி
எரியும் வரை எரியட்டும்.
அது உருகாதது.
அந்தச் சுடர் உன் முறுவல்.
இதை அணைக்க எந்த புயலுக்கும்
வலு இல்லை.
சுடர்ந்து கொண்டே இரு.
உன் ஒலி எனக்கு
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அது நீண்டு கொண்டே இருப்பது தான்
அது உன்னிடம் இருப்பதன்
அடையாளம்.
வேண்டாம்.
உனக்கு முற்றுப்புள்ளியே வேண்டாம்.
எழுதிக்கொண்டே இரு.
உன் பின்னால் தான்
இந்த அண்டம் கூட
அடியெடுத்து வைக்கிறது.
உன் சொல் உதிர்ப்பில்
இதோ சூரிய மகரந்தங்கள்.
இருளை விரட்டிக்கொண்டே....வரும்படி
எழுது.
எழுதுவதை நிறுத்தாதே..
அந்த மாயப்பின்னணி இசை
என்னை
பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
___________________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக