அகழ்நானூறு 92
_____________________________________
சொற்கீரன்
நெருப்பு ஈன்ற சூட்டின் செஞ்சுவை
பனிநீர் நுங்கில் சுவைத்தாள் அன்ன
பிரிதுயர் பிழிதரு ஒண்தேன் பெய்யல்
நெஞ்சில் மூழ்கி நெட்டுயிர் முட்டுநள்
நெடுநல் வாடையின் முளிதயிர்க் கடைகோல்
திரிதரு விசையில் நோன்றாள் என்னே.
பொருள்வயின் தேட்டைக் கேகுவன் மன்
முட்சுரம் கற்சுரம் பொரிய வீழ்த்தும்.
அத்தா நத்தம் அண்ணிப்பேன் என
ஆறுபடுபு அழல் ஊடு புகுந்தன்ன
அணிவெண் வெயிலின் அம்புகுழீஇய
மழையினும் குளிக்கும் களிக்கும்
அவள் இறைமுன் ஆர்கலி ஒலிகள்
ஓர்க்கும் வேர்க்கும் ஒல்லாதவாறு.
_____________________________________________
பொருள் தேடி செல்லும் காதலனின் தேட்டையும்
காதலியின் பிரி துயர்க் கொடுமையும் பற்றிய
எனது "சங்க நடை செய்யுட் கவிதை இது.
சொற்கீரன்
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக