செவ்வாயில் குமிழி வீடுகள்
______________________________________
இ பரமசிவன்
செவ்வாய் தோஷம் என்று அஞ்சி
நடுங்கும் மனிதனே!
தொலைந்து போன
உன் அறிவை கூர் தீட்டு.
உன் கனவுக்குமிழிகள்
விண் இயல் அறிவியலில்
செவ்வாயில் குமிழி வீடுகள்
கட்டிக்கொள்ளும் நுட்பம் நோக்கி
நகரத்தொடங்கி விட்டது.
இதோ இந்த சுட்டி சுட்டுகிறது
உன் மானுடத்தோட்டத்து
மகரந்தங்கள் அங்கு
விதை தூவும் விந்தையினை!
விண்ணேறி வா மனிதா!
சொப்பன சோதிடங்களில் எல்லாம்
சொக்கட்டான் ஆடியது போதும்.
சுடர் வீசும் அறிவு உன்னிடம் உண்டு.
எழுவாய் விழித்து நீ இன்றே
செவ்வாய் வந்தது காண் உன்
வீட்டருகே!
__________________________________________
சொற்கீரன்
__________________________________________________
_____________________________________________________-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக