வியாழன், 30 ஜனவரி, 2025

"கிரௌஞ்ச வதம்"

 


"கிரௌஞ்ச வதம்"

________________________________________


ஹே ராம்!....


ராமா நீ


என்னைக்கொன்று விட்டாயா?


அந்த குண்டுகள் தான்


ராமன் என்ற‌


அவப்பெயரை நீ ஏந்தலாமா?


நானும் உனக்கு


சம்புகன் தானா?


நலிந்த மக்களை காப்பது எனும்


தவத்தை


நான் செய்யக்கூடாதா?


ஹே! ராம்.


இந்த ஒலிப்பே குண்டுகளாய் மாறி


ராமனை வதைத்ததை


எழுதாமல் விட்டு விட்டாரே வால்மீகி.


ஆனால்


இது தான் உண்மையில்


"காண்டேகர்" நாவலில்


வந்த‌"கிரௌஞ்ச வதம்"


___________________________________________


சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக