வெள்ளி, 24 ஜனவரி, 2025

திசை திருப்பல்கள்.

 

திசை திருப்பல்கள்.

_____________________________________


மூணு நாளைக்கு முன் 

வயிற்றில் கொடூர மரண வலி.

துடி துடித்து ஆர்ப்பாட்டம்.

அடுத்த நாள்

மண்டை சிரட்டையில்

கொஞ்சம் வெடுக் வெடுக் 

தலைவலி.

அவ்வளவு தான்

வயிற்றின் மரண வலி

"போயே போயிந்தே"

மண்டை வலிக்கு

இமாலயக் கயிலாயக் கபாலத்தில்

கும்பமேளாக்கலவரங்கள்..

அடுத்த சில மணிநேரங்களில்

காக்காய் வலிப்பு நுரை தள்ள

நரம்பு முறுக்கும் பேச்சுகளின்

வீச்சுகளால்

காது வலி.

நெஞ்சில் சுறுக் சுறுக் வலி.

இப்போ

பழைய எல்லா வலிகளும் போய்

நெஞ்சைப்பிடித்துக் கொண்டு

ஈழத்து வேடத்தில்

பல கோர அபிநயங்கள்.

எல்லாவற்றிற்கும் முன்பே

சினிமாப்படத்தின் ஆரம்பத்தில்

அந்த உடல் சவமாய் விறைத்து

விழுந்து நாறத்தொடங்கியதே

அது என்ன ஆயிற்று?

திசை திருப்பலின்

அரக்கத்தன அரங்கேற்றங்களால்

அந்த அழுகிய உடலின்

உலகம் பூராவும் பரவிய‌

நாற்றத்தை என்ன என்று சொல்வது?

அப்புறம்...

அப்புறமாவது..சப்பரமாவது

ஏண்டா

நான் கதையா சொல்லிகிட்டிருக்கேன்?

அந்த உடல் தான்

புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும்

உன் "ஜனநாயகம்"

என்ன செய்யப்போகிறாய்?

"கூலிங்க் ஐஸ் புரூட் குல்ஃபி!

கோ மாதா ப்ராடக்டின்

பஞ்சகவ்ய குல்ஃபி!

குல்ஃபி..குல்ஃபி..."

அதோ விற்கிறான் பார்.

வாங்கி ருசி பார்!

கொஞ்சம் யோசித்துப்பார்

என்றால்

நீ

கேட்கவா போகிறாய்?


___________________________________________

சொற்கீரன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக