தமிழ்ப்புத்தாண்டு இனிய வாழ்த்துக்கள்
__________________________________________
என்ன எனக்கா புத்தாண்டு?
எனக்கா
வெண் பொங்கல்
இன் பொங்கல் எல்லாம்?
தங்கத்தமிழே உனக்குத்தான்
எங்கள் வாழ்த்து!
அதோ குமரி முனைக்
கடற்கரையில்
ஐயன் வள்ளுவன்
ஏட்டில் எழுதிக்கொண்டிருக்கிறானே
உனக்கு புத்தாண்டு வாழ்த்து!
உலகத்துக்கே தமிழின் வெளிச்சம் பரப்பி!
அந்தப்பேனாவின்
கூர் முனையை
வானத்துக்குப் பாய்ச்சி
தமிழ்ப்புத்தாண்டுக்கவிதையை
கற்கண்டு விடியல் ஆக்கி
களிப்பு ஊட்டுகிறானே
மெரீனா கடற்கரையில்
எங்கள் தமிழினக்காவலன்
கலைஞர் எனும் தமிழ்க்
கனலேந்தியாய்!
தமிழே! அமுதே!
உனக்கே தான்
உன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
சுடர்ந்த வரலாற்றுக்கே தான்
எங்கள் வாழ்த்து.
பொங்கலோ பொங்கல்!
வாழ்க தமிழ்!
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக