"ஸ்டார்ம் இன் ய டீ கப்"
_____________________________________
இந்த சமுதாயம் மாறவேண்டும்
என்று
ஒரு கப் டீ வாங்கி
அதில் ஒரு கரண்டி சர்க்கரையை
போட்டு
கலக்கு கலக்கு என்று
கலக்குகிறோம்.
டீ என்பது வாழ்க்கை.
சர்க்கரை என்பது கனவு.
அந்த கலக்கலில் உள்ள சுழல்களில்
ஒரு புயலின் கருமையம்
உருவாகி விட்டது.
அப்புறம்
இது என்ன?
"ய ஸ்டார்ம் இன் ய டீ கப்"தான்.
இப்படித்தான்
நாம் கணிப்பொறியில்
ஓட்டுகளைப் போட்டு
கலக்குகிறோம்.
அது வெறும் நாற்காலி எண்ணிக்கைகளை
பிம்பிலிக்கி பிலேபி என்று
எண்ணிக் காட்டி
நிமிர்ந்து விட்டோம் என்ற
நம் முதுகெலும்புகளையெல்லாம்
நொறுக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறது.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக