செவ்வாய், 7 ஜனவரி, 2025

பசித்திருங்கள்.

 

பசித்திருங்கள்.
_______________________________
விண்குழல்கள்
என்னென்னவோ
பூச்சுற்றுகின்றன.
இதோ
எல்லாம் முடிந்து விட்டது.
கடையை மூடிவிடுவார்கள்.
உங்கள் பண்டமற்று
விளையாட்டுகளை விளையாடக்
காத்திருங்கள்.
உழைக்கும் மக்கள் தான்
எல்லாம்.
அந்த உப்புக்கரிக்கும்
வேர்வைப்பண்டத்தில்
ஆயிரம் பிரபஞ்சங்களை
உருட்டித்திரட்டிக்கொண்டு
சுடர்ப்பிழம்பாக மாறி
எல்லா "புரட்டுகளையும்"
புரட்டித்தள்ளி விடலாம்.
அதற்கான‌
சிறு பொறிகளைக்கூட‌
இந்த சில்லரை சினிமாக்கள்
படம் காட்ட முடியவில்லையே.
பற்பசைக்குழாயிலிருந்து
பசையை எல்லாம் பிதுக்கிய பிறகு
அந்த குழாய்க்குள்
அதை திணிக்க இயலுமோ?
என்று
ஒரு நகைச்சுவைச் சொல்லாடல்
கேட்டிருக்கிறோம்.
நம் அக்கினிக்கனவுகளும்
அப்படித்தானோ?
காலம் திரை விலக்குமா?
அது வரை
இந்த விண்குழல்களின்
புல்லாங்குழல் முகாரிகளை
வேடிக்கையாக‌
செவி மடுப்போம்.
வேண்டாம்
மூச்சு முட்டுகிறது அல்லவா.
விட்டு விடுங்கள்
அந்த சித்தாந்தம் என்ற‌
கன பரிமாணத்தை உங்களால்
தூக்க இயலாது.
அது உங்கள் அணைந்து போன‌
விடியல்களின்
திரியை பற்ற வைக்கும்
கனல் பரிமாணம்.
சிந்தனைகள் கூர்மையுற்று
அந்த மொட்டைப்பாறையில் கூட‌
ஒரு நாள்
தீட்டப்படலாம்.
அது வரை
பசித்திருங்கள்.
விழித்திருங்கள்.
___________________________________________________
சொற்கீரன்.
எல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக