மொறுமொறுவென்று
வறுத்த பொரிகடலைத் தட்டு
மடியில் இருந்தால்
திண்ணையிலிருந்து
மழையை
பம்பரமும் சாட்டையும்
கால்சட்டைப் பையில் இருந்தால்
மழைதந்த
பள்ளிக்கூட விடுமுறைக்குத்
தங்கப்பொழுதுகள் விழாநடத்தும்.
வைர நொடிகள்
வரவேற்புக் கவிதை படிக்கும்;
பம்பரம் தூங்கும்போதம்
சாட்டையில் சுழற்றிக் கையில்
எடுக்கும்போதும்
பூமிக்கோளமே கைக்குவரும்.
கோடை விடுமுறை நாளில்
சேவல் சண்டைக்குத்
தகுதிச்சுற்றுகள் நடக்கும் தெருக்களில்
அடிவாங்கி உதிர்ந்த
சிறகுகள்
காலாண்டு அரையாண்டுக்
தேர்வுகளில் வாங்கிய
மதிப்பெண்களின்
கண்ணீரில் நனைந்திருக்கும்.
மார்கழிப் பனிநாளில்
நீண்டு உருண்டு திரண்ட
கம்பத்தில் உருவியெடுத்துப் பம்பாய்மிட்டாய்
என்னும் ஜவ்வுமிட்டாயில் வண்ணக் கடிகாரங்கள்,பல்லிகள்
பறவைகள்
செய்து தருவார் மிட்டாய்மாமா! மிட்டாய்பழுத்த அந்த
வேரில்லா மரத்தின்
கழுத்தில் கட்டியிருக்கும்
சலங்கை ஒலிகேட்டுப்
பள்ளிக்கூட மணிநாக்கு வெட்கப்பட்ட
நேரத்தில்
பள்ளிக்கூடத்தைவிட்டு
வெளியேறிய எங்களோடு
கல்வியும் காலடி எடுத்துவைக்கும்
பைகளில்
கசங்கிய பாடநூல்கள்
விழிபிதுங்கப்
பார்த்துக்கொண்டிருக்கும்
பள்ளிகூடக் கட்டடம் மட்டும்
உள்ளம் கலங்கி
நின்றுகொண்டிருக்கும்.
பள்ளிக்கூட
விளையாட்டுட்டுத் திடலில்
எங்கள் பாதம்பட்டு,
விடைபெற்றுப் போன
கார்த்திகையின் கண்ணீர்
தெறிக்கும்.மனம் வலிக்கும்
1-1-2025காலை 9மணி
மொறுமொறுவென்று
வறுத்த பொரிகடலைத் தட்டு
மடியில் இருந்தால்
திண்ணையிலிருந்து
மழையை
பம்பரமும் சாட்டையும்
கால்சட்டைப் பையில் இருந்தால்
மழைதந்த
பள்ளிக்கூட விடுமுறைக்குத்
தங்கப்பொழுதுகள் விழாநடத்தும்.
வைர நொடிகள்
வரவேற்புக் கவிதை படிக்கும்;
பம்பரம் தூங்கும்போதம்
சாட்டையில் சுழற்றிக் கையில்
எடுக்கும்போதும்
பூமிக்கோளமே கைக்குவரும்.
கோடை விடுமுறை நாளில்
சேவல் சண்டைக்குத்
தகுதிச்சுற்றுகள் நடக்கும் தெருக்களில்
அடிவாங்கி உதிர்ந்த
சிறகுகள்
காலாண்டு அரையாண்டுக்
தேர்வுகளில் வாங்கிய
மதிப்பெண்களின்
கண்ணீரில் நனைந்திருக்கும்.
மார்கழிப் பனிநாளில்
நீண்டு உருண்டு திரண்ட
கம்பத்தில் உருவியெடுத்துப் பம்பாய்மிட்டாய்
என்னும் ஜவ்வுமிட்டாயில் வண்ணக் கடிகாரங்கள்,பல்லிகள்
பறவைகள்
செய்து தருவார் மிட்டாய்மாமா! மிட்டாய்பழுத்த அந்த
வேரில்லா மரத்தின்
கழுத்தில் கட்டியிருக்கும்
சலங்கை ஒலிகேட்டுப்
பள்ளிக்கூட மணிநாக்கு வெட்கப்பட்ட
நேரத்தில்
பள்ளிக்கூடத்தைவிட்டு
வெளியேறிய எங்களோடு
கல்வியும் காலடி எடுத்துவைக்கும்
பைகளில்
கசங்கிய பாடநூல்கள்
விழிபிதுங்கப்
பார்த்துக்கொண்டிருக்கும்
பள்ளிகூடக் கட்டடம் மட்டும்
உள்ளம் கலங்கி
நின்றுகொண்டிருக்கும்.
பள்ளிக்கூட
விளையாட்டுட்டுத் திடலில்
எங்கள் பாதம்பட்டு,
விடைபெற்றுப் போன
கார்த்திகையின் கண்ணீர்
தெறிக்கும்.மனம் வலிக்கும்
1-1-2025காலை 9மணி
பள்ளிப்பருவம்
____________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக