புதன், 1 ஜனவரி, 2025

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

"புத்தாண்டு  வாழ்த்துக்கள்!"

________________________________________________


அன்பு நிறை கவி இமயம் 

ஈரோடு தமிழன்பன் அவர்களே !


உங்களுக்கு 

எங்கள் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அடை மொழியாய் "ஆங்கிலப்புத்தாண்டு" என்று 

பத்தாம்பசலியாய் உரத்து மொழிவதில் 

என்ன இருக்கிறது?

தமிழ் எத்தனை நூற்றாண்டுகளாய்  இவர்கள் 

சிறைக்குள் இருட்டிக்கிடந்தது?

என்பதை சிந்திக்க முயல்வதன் 

உட்பொருளே இந்த இனிய 

புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

இல்லாவிட்டால் 

"சித்திரை விஷு" என்று 

தர்ப்பைப்புல்லும் மந்திரமுமாய் 

ஒருவர் இரைச்சலை 

வழி மொழிந்து வழி மொழிந்து

முண முணத்துக் கொண்டிருப்போம் .

இப்போதும் 

தைத்திரு நாளில் 

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினால் 

தமிழ்ச்சூத்திர‌னுக்கே

கோபம் பொங்கிக்கொண்டு வருகிறது.

மாட்டுக்கொம்புக்கு 

வர்ணம் பூசுவது போல்

நாலு வர்ணம் பூசாமல்

மகிழ்ச்சியின் மொழியில்

"எல்லோரும் கொண்டாடுவோம்"

என்று தமிழர்கள் எல்லோரும்

இனிய புத்தாண்டு சொல்லி மகிழ்கிறோம்.

நீங்களும்

நம் மார்பில் புறநானூற்று வரிகள்

நாளங்களாய் வீரத்தின் மூச்செடுத்து

பெருக்கெடுத்த பெருமிதத்தை

சொல்லி சொல்லி 

புல்லரிக்க வைத்து விட்டீர்கள்.

ஆதலினால்

தைப்பொங்கல் தமிழர் திருநாளின்

புத்தாண்டு மகிழ்ச்சியின்

பொங்கு மா பெருங்கடலின்

அலையோசையை இன்றே ஆர்ப்பரித்து

தொடங்குவதாய் 

வாழ்த்தொலிப்போம்.

வாரீர்.

நம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தைத்திங்கள் முதலாம் நாள் வரைக்கும்

தமிழ்ப்பொங்கல் நாள் வரைக்கும்

முழங்கட்டுமே!


___________________________________________________________

சொற்கீரன்

(01.01.2025   ல் "வருக வருகவே "என்ற தலைப்பில்  

ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கவிதை தந்த களிப்பில்

 எழுதிய கவிதை இது)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக