புத்தாண்டின் முதுகுப்பக்கம்
____________________________________
புத்தாண்டு
"ஸிப்"கிழித்துக்கொண்டு போய்
ரெண்டு மூணு நாள் ஆகி விட்டது.
அதே விடியல்.
அதே பகல் மற்றும்
இரவு நேரம்.
வழக்கம்போல்
விண்மீன்கள் சோழி குலுக்கி
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
வீசும் காற்றிலும்
இன்னும் ஒரு புதிய கவிதை
கருதரிக்கவில்லை.
ஆனாலும்
அந்த காற்றுவெளியிடை
ஏதோ ஒரு
நக்கலான சிரிப்பொலி
கேட்கிறது?
கூடவே "லைக்" இல்லாமலேயே
கமெண்டுகளும்!
என்ன அது?
அந்த கணிப்பொரி எப்படி என்று
கேட்டு பக பக வென்று
சிரிக்கிறது.
"என்ன பிழையோடு சொல்கிறாய்?
பெரிய "றி" என்ன ஆச்சு?
போதும் போதும்
நீங்கள் கிளிக்குவதற்கு
சின்ன "ரி"யே போதும்.
ஏதோ மெல்லுவதற்குத்தான் இது வேண்டும்?
வெல்லுவற்கு என்று உங்களுக்கு
மிச்சம் என்ன இருக்கிறது?
பட்டன் அழுத்தி அழுத்தி
உங்கள் விரல்கள் மரத்துபோனதாமே.
மரத்துப்போன ஜனநாயகத்துக்கு
கான்ஸ்டிடியூஷன் ஒரு கேடா?
உங்கள் தர்மநியாயங்கள்
அடித்து நொறுக்கப்பட்டு
அந்த காயலாங்கடைக்குப்பையில்
கிடப்பதன் ஓர்மையாவது
உங்களுக்கு உண்டா?
இனி தேர்தல் என்று சொல்வதும்
தேசவிரோதம்!
தெரிந்து கொள்ளுங்கள்.
உஷ்! மூமூச்ச்ச்ச்!
நாராசமாய்...
எங்கள் காதுகள் கிழிந்து போயின!
___________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக