மயிற்பீலிகள்
வருடி வருடி
களைத்துப்போயின.
கனவுச் சதை மிச்சங்களில்
தூக்கத்தின் கடமுட
இரைச்சல்களின்
எலும்புகள்
துருத்திக்கிடந்தன.
இன்றாவது சொப்பன வலைக்குள்
விழுந்து
துடித்துக்கொண்டு கிடக்கலாம்
என்றவளுக்கு
பஞ்சணைப்பாறாங்கல்லே
உரசி உரசி
அதோ அந்த தீப்பொறிகளீல்
இப்போது தான்
பற்ற வைக்க ஆரம்பித்திருக்கிறது.
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக