மருது வரைந்த பெரியாரின் ஓவியம்
_________________________________________
இந்த
நெளிவு சுளிவுகளின்
கோடுகளில் எல்லாம்
நரம்பு வெள்ளம்...
அந்தக் கண்ணாடிகளுக்குள்ளிருந்து
கதிர்வீசும் கல்பாக்கச் சீற்றங்கள்..
மூடத்தனமான புராணங்களை
சாம்பலாக்கும்.
பகுத்தறிவு வெளிச்சம்.
எரிமலை சிந்தனைகளில் வழிந்த
எழுத்துக்களின் "லாவா".
ஆனால்
விஷப்பூச்சிகள் எல்லாம்
விஷ வரலாறுகளை
கக்கிக்கொண்டே இருக்கின்றன.
இதற்கு
மருந்து அடிக்காதீர்கள்
மனிதர்களே.
அவை சாகாது.
அவற்றின் மீது
எதிர் விஷம் கக்குங்கள்.
சொல்லிக்கொண்டே இருங்கள்.
கடவுளைச் சொன்னவன் காட்டுமிராண்டி.
கடவுளை பரப்புபவன் மனிதகுல எதிரிகள்.
சாதிகள் சொல்பவனே
கொடூரமான விலங்கு.
அந்த விலங்குகளுக்கு
விலங்கிடுங்கள்.
அப்போது தான்
மனிதன் மனிதம் மலர்விப்பான்.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக