சனி, 25 ஜனவரி, 2025

"சிருஷ்டியும் திருஷ்டியும்..."

 

"சிருஷ்டியும் திருஷ்டியும்..."

________________________________________



கடவுள்

மனிதனைப் படைத்து விட்டு

பார்த்தான்.

ஆகா!எவ்வளவு அழகு நீ!

கல்லடி படலாம்

கண்ணடி படலாமா நீ

என்று ஒரு "திருஷ்டிப் பொட்டாக"

"கோவிலை"ப்படைத்தான்.

. . . . . . . . . 

. . . . . . . . . . . . 

மதம் ஏன்

இவ்வளவு அசிங்கமாகப் போனது என்று

இப்போதாவது 

உனக்கு புரிந்ததா?

அவன் கேட்டது 

இவனுக்குப் புரியவில்லை.

இவன் மந்திரங்களும்

அவனுக்கு 

இன்னும் புரியவே இல்லை.

_________________________________

சொற்கீரன்.


APPENDIX


புரியலையா?

நன்னா சொல்றேன்

கேட்டுக்கோ..... . 

மந்திரத்தை மொழி பெயர்த்தார்.

இவ்வளவு கோயிலைப்படைத்து

இவாளுக்கு "அறிவையும்னா"

கொடுத்திட்டே..

அதான் இங்கே எல்லாம்

காத்தாடுது

ஒண்ணும் பத்தலே..

_________________________________

சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக