திங்கள், 1 ஆகஸ்ட், 2022

வேறு பூமி படைப்போமா?

வேறு பூமி படைப்போமா?

இந்த பூமியை தூக்கியெறியும் 

திறன்புயம் கொண்ட‌

நீண்ட ஒரு நெம்புகோலை தாருங்கள்

அப்புறம் பாருங்கள்

என்றானாம் ஆர்க்கிமெடீஸ்.

அறிவுத்திடம் கொண்ட 

நம் நம்பிக்கையின் முன்

இந்த பூமிகள் வெறும் கூழாங்கற்கள்.

பழைய புராணங்களா

இன்னும் நம்மை புரட்டிக்கொண்டிருப்பது?


_________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக