சனி, 27 ஆகஸ்ட், 2022

வண்ணதாசன் அவர்களின் கவிதை

 Vannadasan Sivasankaran S

2ம.  · 


வண்ணதாசன் அவர்களின் கவிதை

_______________________________________________


அம்மாவின் ஐம்பத்து ஆறாம் வயதில்

எனக்கு முப்பத்து ஐந்தாம் வயது.

அழுதுகொண்டு தனியாக அமர்ந்திருக்கும்

அம்மாவைப் பார்ப்பது அதுதான் முதல் முறை.

ஏன் அழுகிறாய் என்று நான் 

கேட்கக் கூடாது என்றும் 

ஏன் அழுகிறேன் என்று அவள்

சொல்லமாட்டாள் என்றும்  தோன்றியது.

‘சலவைக்குப் போன உருப்படிகள் வந்துவிட்டதா?’

அவள் முகம் பார்க்காமல் என்னுடைய கேள்வி.

‘ஒரு உருப்படி மட்டும் பாக்கி’

இருளிலிருந்து உருவிய குரலில் அவள் பதில்.

ஒரு துயரம் கனத்த கணத்திற்குப் பின்

எங்களுக்குள் நடந்த உரையாடல்

இப்படித்தான் இருந்தது

ஒரு சீக்காளியின் மூத்திர வாடை போல.

%

2015


_________________________________________________


நேரம் காலை 11.004 ..27.08.2022

முகநூல்


பிஞ்சு அர்த்தம்

____________________________________

ருத்ராவின் கவிதை


தாயின் கர்ப்பைக்குள் புகுந்து

பிறக்கப்போகும் 

அபிமன்யூவின் வியூக கணிதங்களின்

உள்ளே நோக்கும் வாமதேவர்களாய் 

இருந்திருந்தால்

இப்படி 

தாய்மை ஒரு

கேவலமான மூத்திர வாடையாய்

மாறாமல் போக 

ஸ்லோகம் சொல்லியிருப்பார்.

அம்மா தனியாய் அழுது கொண்டிருந்ததைப்

பார்த்த பிள்ளைக்கு தோன்றுகிறது.

"அட ஏன் தங்கச்சிப்பாப்பா

அழுகிறது?

அம்மா பால் குடும்மா..

பாப்பா அழுதில்ல.."

அந்த சிசுவைப்பார்த்து

இந்த சிசுவுக்கு புரிந்த‌

பிஞ்சு அர்த்தம் இது தானே 

இருக்க முடியும்

முற்றிப்போன முரண் அர்த்தங்கள்

எதுவாய் இருந்தாலும்.

அன்று

கருப்பைப்பைக்கடலுக்குள்

பிடித்த அந்த உயிரின் அமுத வாசனையில்

இந்த மூத்திரவாடையும் தான்

பாஷ்யம் சொல்கிறது என‌

கனத்த தருணங்கள் இங்கே

கன்னிக்குடம் உடைத்துக்கொண்டிருக்கிறது.


____________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக