Vannadasan Sivasankaran S
30 நி ·
இன்னொரு நாள் என்னை உற்றுப் பார்க்கிறது.
சன்னல் கதவை வெயில் தட்டுகிறது.
ஒன்றும் சிரமமில்லை.
மாத்திரைகள் வடிவமாகிவிட்ட படுக்கையிலிருந்து
வேப்ப இலைகளின் ஆனந்தக் கூத்தை
விருப்பக் காற்றின் மெல்லிய இசையை
துளை நீங்கும் மண் புழுவை
தொடர்மலையிடை வீழும் அருவியை
ஒன்றினுள் ஒன்று செருகிய செம்பருத்தி இதழ்களை
பேரன்பின் நரைமயிரால் முறுக்கிய தாத்தா மீசையை
அம்மா முன் எரிந்த விறகு அடுப்புத் தீயை
என் மகள் உபயோகித்த ஆங்கில அகராதியை
என்னுடைய அந்த ‘மூன்றாம் முள். கவிதையை
உன்னுடைய பற்றிக்கொள்ளும் ரசவாதக் கையை
எதை வேண்டுமானாலும் இப்போது
கற்பனைசெய்து கொள்வேன் ,
வாதையின் கூடாரத்தில் இருந்து மீண்டும் சொல்கிறேன்
எந்தச் சிரமமும் இல்லை.
%
மீள்.
1 கருத்து
E Paramasivan Paramasivan
இந்த கம்பியூட்டர் படிப்பாளிகள்
சும்மா விடா மாட்டார்கள்
போலிருக்கிறது.
ஏதாவது ஒரு நிழலை
காட்டுங்கள்
அதில் சொட்டியிருக்கின்ற
ரத்தவாடையை ஸ்கேன் செய்து
குவாண்டம் கம்பியூட்டிங் மூலம்
அந்த உயிரை க்ளோன் செய்து காட்டிடுவோம்
என்கிறார்கள்.
கல்யாண்ஜி அவர்களே
உங்களின் அந்த "கற்பனைப்பப்பியை"
பொன் சங்கிலியோடு
பிடித்துக்கொண்டு போய்விட ஆசை.
____________________________________
ருத்ரா
______________________________________
12.43 Noon 28.08.2022. Madurai 7.KarpagaNagar. Plot 628.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக