ஏக்கங்கள் மிக மிகக் கனமானவை.
துலாபாரங்கள்
வைத்துப்பாருங்களேன்.
அந்த தெருவோரத்து துரும்புகளின்
ஏக்கத்தில் இருந்தது
கோடி கோடி மடங்கு
விஸ்வரூபங்கள்.
அது வெறும் ஒரு பிடிச்சோறா?
இல்லை
இந்த சமுதாயத்தின்
சீக்குப் பிடித்த சித்திரங்களை
சிதைத்து எறியுங்கள்
எனும்
உள்சீற்றமா?
மீண்டும் விஞ்ஞானத்தை ஆரம்பியுங்கள்.
சிந்தனையின் அணுக்கரு மையத்தை
பிளந்து கொண்டே செல்வது தான்.
குவார்க்குகளும் போஸான்களும்
அந்த ராட்சசத்தனமான சம்மட்டிகளை
தூக்கிக்கொண்டு
பின்னே பின்னே
ஓடி வரட்டும்!
_____________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக