இன்னும் கொஞ்சம் உயரம் தான்.
__________________________________
ருத்ரா
இன்னும் கொஞ்சம் உயரம் தான்.
அப்புறம்
உன் காலின் கீழ்
இந்த மலைகள் ஆறுகள்
மேகப்பிழம்புகள்...
இன்னும்
கருந்துளை வழியாக புழுத்துளையில்
போய்
மடங்கி மடங்கி
இந்த பிரபஞ்சங்களையே
புரோட்டாவுக்கு மாவு பிசையலாம்
போலிருக்கிறது.
ஆம்..
கொஞ்சம் உந்தியெழு.
கிளர்ந்து எழு.
உன் ஒவ்வொரு மயிர்க்காலும்
வைர ஊசியாய்
குத்திட்டு சிலிர்க்கட்டும்.
சினமுறு.
சீற்றமுறு.
மானிட இறுக்கத்தின்
பகை வெறி
மனிதக்கருப்பைகளையேவா
கசக்கி நசக்கிப் பிழிவது?
ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்புக்கு
காதல் வந்து விட்டால்
கேலக்ஸிகள் கூட
இதயமாய் வாசல்திறக்கிறது.
நீ
சிங்கமாகு.
அங்கே அக்கினிப்பிடரிகள்
அலைகள் விரிக்கும்.
இன்னும் சற்று உயரம் பார்.
இந்த மாயை வர்ணங்கள கலைந்து போகும்.
அநீதியாய் ஆதிக்கம் காட்டும்
அதர்மங்கள்
அழிந்தே போகும்.
இதற்கு
சம்பவாமி யுகே யுகே
என்று சொல்லிக்கொண்டு
எந்த அரிதாரங்களும்
உன் பார்வையை மறைத்து
புகை போடவேண்டாம்.
அதோ!
உன் உயரம் வந்து விட்டது.
ஒரே பாய்ச்சல் தான்.
முடிந்தது.
அஞ்ஞானத்தின் விஞ்ஞானம் கூட
உன்
சிந்தனைக்குள் சிறகடிக்கும்.
ப்ரேன் காஸ்மாலஜி என்று
விண்வெளியாளன்
தன் மூளையில் வரையும் ரங்கோலிகளின்
கணிதமே உன்
சோசியல் டனாமிக்ஸ்.
ஏமாற்று வரலாறுகள் எல்லாம்
அதோ
நொறுங்கிப்போய் விட்டன.
எழு!
எழு!
உயர..உயர எழு!
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக