வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

புத்தகச்சிற்பி.

 நேரம் இரவு 08.07 ...26.08.2022 முகநூல்


Vannadasan Sivasankaran S

9நி  · 

ஒரு கவிதையைஇப்போதுதான் எழுதி முடித்தேன்.

வாசித்துக் கூடப் பார்த்துவிட்டேன்.

சொற்களை உச்சரிக்க நன்றாகவே இருக்கிறது.

இந்தக் கவிதையின் ஏதாவது ஒரு சொல்லை,

தொட்டுப் பார்க்க விரும்புகிறேன்.

தொட்டுப்பார்க்க முடிகிற சொல்லை

அடைந்துவிட்டால்

அப்புறம் எதையுமே நான்

சொல்ல வேண்டியதில்லை

%

2021


புத்தகச்சிற்பி.

______________________________________________________

ருத்ரா


ஒரு சொல்லுக்கும் 

ஒரு விஞ்ஞானம் உண்டு.

கவிஞனின் கணித சமன்பாடு

அவன் மன ஏட்டில் கிறுக்கப்படுகிறது.

அந்த சொல் கருந்துளையா?

அந்த சொல் புழுத்துளையா?

எப்படியும் 

அந்த சொல்லை வைத்து

பிரபஞ்சத்தை பத்தமடைப்பாயாய்

சுருட்டி மடக்கி விரித்து உதறிப்போட்டு

படுத்துக்கொள்ளலாம்.

கனவின் விளிம்பை கத்தியாக்கி

அந்த கூர்மையைக்கூட‌

நீல மற்றும் வெள்ளை

சங்குபுஷ்பங்களாக்கி

மென்படுக்கை அமைத்துக்கொள்ளலாம்.

சொல் கருவுற்ற‌

எழுத்துக்களில்

எரிமலை தோகை விரித்துக்கொண்டே

பச்சை மினு மினுப்பில் கூட‌

அகவும் அனற்குரல் கேட்கலாம்.

அந்த சொல் அவனுக்கு சொந்தமா?

அவன் அந்த சொல்லுக்கு சொந்தமா?

சிந்துபூந்துறைக்கரையில்

அப்படித்தான்

சொற்களை கழற்சி ஆடிக்கொண்டிருந்தான்

அன்று

புதுமைப்பித்தன் 

எனும் 

புத்தகச்சிற்பி.


_______________________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக