ஒரு கோப்பை நிறைய
சொற்களின்
நுரைப்புகளையும்
நொதிப்புகளையும்
வைத்துக்கொண்டு
ஒரு கவிதை எழுதிவிடலாம்
இந்த வலியைப்பற்றி.
அது கடைந்தெடுத்த ஏமாற்றுவேலை.
இது தானே பிரம்ம வலி.
இதற்கா லட்சம் ஸ்லோகங்களை
குவித்து வைத்துக்கொண்டு
பிரம்மத்தை தேடுவதாய்
கூப்பாடு போடுகிறார்கள்?
இதன் வாசற்படியிலேயே
ஆயிரம் கோவில் சந்நிதானங்கள்
குப்பைகளாகிக்கிடக்கின்றன.
____________________________________________
ருத்ரா
ttps://www.msn.com/en-in/news/other/watch-period-pain-simulator-at-kochi-mall-proves-unbearable-for-some-eye-opener-for-others/ar-AA10CtTf?ocid=msedgntp&cvid=4a4052bbe90049e4be30f234b154601f
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக