அது இசையா?
சன்னமாய் செவிகளுக்குள்
தேன்சிட்டுகள்
ஊசிச்சிறகைக்கொண்டு
அதிர்வு எண்களில்
ஆகாசமே இனிமையை
கொப்புளிக்கச்செய்த
அந்த
"சின்ன சின்ன ஆசை..."
மறக்க முடியலையே.
எங்கோ தெரிகின்ற அந்த பச்சை வயல்..
தண்ணீரின் பளிங்கு உடலுக்குள்
துள்ளுகின்ற
மீன் துடிப்புகள்..
அந்த படகுத்துடுப்பு நீண்டு ஒலித்து
நம் நெஞ்சுள் ஆழமாய் விழும்
இசை நங்கூரம்...
வைரமுத்து என்று சாதாவாய்
பெயர் வைத்துக்கொண்டு வந்தவரின்
வரிகள் ஒவ்வொன்றும்
கிம்பர்லி சுரங்கம் ஆனதிலும் கூட
தமிழ் ரீங்கரித்தது
வைரச்சிறகுகளைத்தான்.
என்னடா உங்க ரஹ்மான்
என்று நாக்கில் பல்லைப்போட்டு
கேட்பவர்களுக்கு
காட்டி விட்டது "கனடா".
...
கானடா..
என் பாட்டு தேனடா..
இசைத்தெய்வம் நானடா..
அய்யோ
ஒரு சின்ன புல்லையும்
அதிரவைத்து பேசத்தெரியாதவர்
ரஹ்மான்.
இசையின் உயரங்களையெல்லாம்
தன் அடக்கம் எனும்
உயர் பண்பில் பூத்து
புன்முறுவல் காட்டுபவர்
ஏ ஆர் ஆர்.
வாழ்க அவர் இசை!
ஓங்குக அவர் புகழ்!
____________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக