செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

எங்கே அவள்?

 எங்கே அவள்?

____________________________________________

ருத்ரா




எங்கே அவள்?

இங்கே பார்த்ததாய் சொல்கிறார்கள்.

அங்கே எங்கோ பார்த்ததாய் 

சொல்கிறார்கள்.

ஆற்றோரம் குளத்தோரம்

ஆலமரம் வேப்பமரம்

மலை உச்சி.

மேகக்கூட்டம்

வானத்தைப்பிளந்து

அதில் எழுப்பிய மாளிகையில்

அவள் வருகிறாள்.போகிறாள்.

எங்கே 

அவளை நிற்கவைத்து

நான் மண்டியிட்டு என்

ஒற்றை ரோசாவை அவளுக்கு

நீட்டுவது?

உலகத்துப்பெண்களிடம் 

என் மீது காதல் வரவில்லையே!

அவள் தான் அரசல் புரசலாய்

அந்த நீலக்கண்களின் நீள் விழியில்

ஒரு தூண்டிலுடன் காத்திருக்கிறாள்.

கவலைப்படாதீர்கள்.

அதோ..

அவள் அமுதச்சுவடுகள் 

ஒலி கிளப்புவது

உங்களுக்கு கேட்கவில்லையா?

அந்த ரோசாப்பூவோடு கையாட்டுங்கள்.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்காரர்கள்

சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இதோ ஒரு 

இருநூறு மில்லியன் லைட் இயர்ஸ் தான்...

நீலவிழி காட்டி ப்ரொபோஸ் பண்ண‌

வந்து கொண்டிருக்கிற‌

ஏலியப்பெண்ணே!

கவலையில்லை.

இந்த ஒற்றை ரோசாவுடன் 

உனக்காக காத்திருக்கிறேன்.


__________________________________________________











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக