வண்ணதாசனின் மரப்பாச்சியின் அனாடமி
_________________________________________________
ருத்ரா
முன் புறம் பின் புறம்
என்று
அந்த மரப்பாச்சியின்
அனாடமியைக் கூட
அற்புத வரிகளாக்கி
கவிதை தந்த வண்ணதாசனுக்கு
கண்ணுக்குள் கண்ணுக்குள் கண்ணுக்குள்...
என்று
எத்தனை ஆயிரம் கண்கள் இருக்கும்?
"எலெ மூதி.
கண்ணு என்ன பொடதியிலா இருக்கு
பாத்து வாலெ"
கால் தடுக்கி பின்னால்
அழுதுகொண்டே ஓடும்
எனக்கு அம்மை ஏசியது
அப்போது விளங்கவில்லை.
இப்போது புரிகிறது.
மனிதன்
முன்னூத்து அறுவது டிகிரியில்
கண் செய்து வைத்துக்கொண்டு அல்லவா
இந்த பிரபஞ்சத்தை
துருவி துருவி பார்க்கிறான்.
ஓலையில் எழுத்தாணி கொண்டு
செதுக்கி செதுக்கி
தமிழ்க்கண் படைத்த புலவர்கள் கூட
புறநானூறு அகநானூறு என்று
தங்கள் பார்வை ஒளியில்
அகழ் ஞாயிறுகள்
ஆயிரம் வைத்திருந்திருந்தனர்.
கடுகையும் அணுவையும்
துளைத்து
ஏழ்கடலை புகட்டி
நுண்மாண் நுழைபுலம்
புகுந்து
நமக்காக ஆற்றுப்படைகளில்
வரிகள் பிளந்து வகைகள் காட்டினர்.
முன் புறம் பின் புறம்
என்று
அந்த மரப்பாச்சியின்
அனாடமியைக் கூட
அற்புத வரிகளாக்கி
கவிதை தந்த வண்ணதாசனுக்கு
கண்ணுக்குள் கண்ணுக்குள் கண்ணுக்குள்...
என்று
எத்தனை ஆயிரம் கண்கள் இருக்கும்?
"எலெ மூதி.
கண்ணு என்ன பொடதியிலா இருக்கு
பாத்து வாலெ"
கால் தடுக்கி பின்னால்
அழுதுகொண்டே ஓடும்
எனக்கு அம்மை ஏசியது
அப்போது விளங்கவில்லை.
இப்போது புரிகிறது.
மனிதன்
முன்னூத்து அறுவது டிகிரியில்
கண் செய்து வைத்துக்கொண்டு அல்லவா
இந்த பிரபஞ்சத்தை
துருவி துருவி பார்க்கிறான்.
ஓலையில் எழுத்தாணி கொண்டு
செதுக்கி செதுக்கி
தமிழ்க்கண் படைத்த புலவர்கள் கூட
புறநானூறு அகநானூறு என்று
தங்கள் பார்வை ஒளியில்
அகழ் ஞாயிறுகள்
ஆயிரம் வைத்திருந்திருந்தனர்.
கடுகையும் அணுவையும்
துளைத்து
ஏழ்கடலை புகட்டி
நுண்மாண் நுழைபுலம்
புகுந்து
நமக்காக ஆற்றுப்படைகளில்
வரிகள் பிளந்து வகைகள் காட்டினர்.
எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும்
ஒரு "பொறவாசல்" உண்டு
அதன் கிறீச்சிடும் கதவுகளை
தொற்றக்கொண்டு ரயில் விட
வண்ணதாசனுக்கும்
ஒரு சின்ன சின்ன ஆசை.
அதுவும்
சூரியனின் முதுகை மயிலிறகால்
வருடி விட இன்னும் இன்னும் ஆசை.
_______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக