திங்கள், 8 ஆகஸ்ட், 2022

கோடாங்கிகள்.

 "வாழ்ந்து பார்"

என்ன ஏமாற்றுத்தனமான சொற்றொடர்!

"இறந்து பார்" என்பதைத்தான்

அப்படிச்சொல்கிறார்களா?

இறந்த பிறகு நம்மை

பார்க்க முடியாது என்பதைப்போல் தான்

நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை

நாமே பார்க்கமுடியாது?

இந்த இரண்டு பிம்பங்களையும்

காட்டும் 

மாயக்கண்ணாடிகள்

இங்கே உண்டு.

இலக்கியமும் தத்துவமும் 

பேசும் 

வேடதாரிகள் 

புனைந்து காட்டும் 

சொற்பிழம்புகளில் கொஞ்சம் 

விழுந்து பாருங்கள்.

"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு."

வள்ளுவரும் ஒரு வகையில்

கோடாங்கி தானோ?

அவர் சொற்களில் அந்த "அந்த உடுக்கை"

எப்படி அடிக்கிறது பாருங்கள்.

வாழ்க்கையே இப்படி "ஒத்திகை" பார்ப்பது தான்

என்றால்

டி எஸ் எலியட்டும் பேப்லோ நெருதாவும்

காட்டாத சொற்களின் "பயாஸ்கோப்புகளா?"

அந்த 

பயாஸ்கோப்பை நீங்களே

போட்டுப்பாருங்கள்.

"வாழ்ந்துபார் அல்லது

இறந்து பார்"

காதல் எனும் காக்காமுள்ளின் 

கடுப்பில் இனிக்கும் 

உணர்வுகள் அதோ

கோடாங்கியின் ஒலிகளாய்....

இப்போது புரிகிறதா? 

________________________________________________

ருத்ரா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக