புதன், 24 ஆகஸ்ட், 2022

கல்யாண்ஜி குளித்த "நொய்யல்"

 கல்யாண்ஜி குளித்த "நொய்யல்"

__________________________________________

ருத்ரா


ஒரு நாவலை 

இப்படி

ஒரு தாமிரபரணியாக்கி

அதற்குள் முக்குளி போட்டு

நீர்க்காக்கை ஒன்று சொட்ட சொட்ட‌

தலை நீட்டுமே

அப்படி செய்யமுடியுமா என்றால்

அது கல்யாண்ஜியால் மட்டுமே முடியும்.

சமீபத்தில் தான்

"ப்ராப்ளம்ஸ்கி ஒட்டலில்" அந்த‌

பெல்ஜிய இலக்கியச்சவ்வை

தன் வாசிப்புப்பல்லில் 

ருசித்துக்கடித்து நம் மூளைக்குள்

ஊருகின்ற "கூஸ்பம்ப்" முசு முசுப்புக்காட்டை

சல சலத்துக்காட்டினார்.

இப்போது இந்த நொய்யல்.

நான் தின்ற சாக்கலேட் எச்சிலைக்கூட 

தரமாட்டேன் என்று

அடம்பிடிக்குமே

அந்த குறும்புச்சிறுமி போல்

பிகு செய்து கொண்டே 

மொத்த நாவலின் ஒளி ஒலிக்காட்சியை

அந்த 

சாம்பக்கரைப்பு படித்துறையின் 

மருதமர இலைக்கொளுந்துகளுக்கு 

ஊடேயே விரவி விட்டாரே.

மந்திரத்தை கொஞ்சம் கடுமையாய் சொல்லி

நம் "நெல்லைக்கண்ணனை"

அந்த துறையை விட்டு அகலச்சொல்ல வேண்டும்.

இல்லாவிட்டால்

கல்யாண்ஜியின் சொல் சிலிர்ப்புகளில்

அங்கேயே 

மாபெரும் பொதுக்கூட்டம் போட்டுவிடுவார்.

அந்த "ஹோலோகிராஃபிக்" திரையில்

நமக்கு மட்டுமே தெரிகிறது.கேட்கிறது.

அந்த "நொய்யல்"பக்கங்கள் ஒவ்வொன்றும்

அங்கே 

இனிமைப்பிரளயங்களில் 

இலக்கியப்பெய்யல்கள்.


__________________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக