குறுவரிகள்
(ஐக்கூ)
________________________
ருத்ரா
இது அவள்
முகம் துடைக்கவா? என்
அகம் துடைக்கவா?
கைகுட்டை
__________________________
பாறையில் தலை
சிதறி வெயிலில்
எங்கும் ஏழுவர்ண ரத்தம்.
அருவி
___________________________
இதன் வழியே
ஆகாயம் வடிகட்டித்தந்தது
பசுமை உயிர்மை.
இலைப்பின்னல்கள்
____________________________
அலைகளின் சன்னல்
இங்கு தான் திறந்தது
உலகம் தெரிந்தது.
கடல்
_____________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக