வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

நட்டு வைப்போம்?

 எழுபத்தியைந்து ஆண்டுகள் என்று

இந்த வாரம் முழுதும் 

ஏலம் விட்டுக்கொண்டே இருப்போம்.

இந்த இரைச்சல் விழாவில்

நம் மொத்த தேசமும்

சில வல்லுறுகளுக்கு 

தின்னக்கொடுக்கப்பட்டிருப்பதைப்பற்றி

யாருக்கு கவலை?

இருபது ரூபாய்க்கு வாங்கி

நட்டு வைப்போம்.

மின்னல் நாற்றுகளை விட்டு விட்டு

இவற்றை மட்டுமே இப்போது

நட்டு வைப்போம்?

_____________________________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக