வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முள்ளிய கானின் முளியிருள் கழைஇடை

 முள்ளிய கானின் முளியிருள் கழைஇடை

____________________________________________



முள்ளிய கானின் முளியிருள் கழைஇடை

தெள்ளிய எல் ஒளி பிசிரத்தந்த பொன்சுடர்

காலையின் அரிகுரல் ஆங்கு ஐம்பால் காட்ட‌

கடவுட் பெருங்கடாஅத்துப் பரூஉங்கண் பொறிய‌

அறுமீன் கூட்டிய வெளியும் ஒளியும்

புல்லிய நுண்கடம் மறை உயிர்த்துடிப்பும்

அணுவுக்குள்ளும் அண்ணாவெள் வெளி 

அடுவிசைப் பண்டம் ஆகுமிவ் வண்டம்

ஒரீஇ ஓர்த்த பூதனார் புகன்ற‌

உறுபொருள் அன்ன விரவிய அறிவின்

கருப்பொருள் காட்டும் பூவும் புள்ளும்

விரித்த போழ்துள் உரித்த போழ்தும்

வெளியை உள்ளாய் உள்ளை வெளியாய்

உருகெழு காட்டும் கொள்ளை அறிதிறன்

கோவில் ஆக்கும் மாய்மையே ஈண்டு

மெய்மை என்ன விதிர் விதிர் புலத்து

மேய்கதிர் சிந்தனை இறையாகும்மே!


__________________________________________

கல்லிடை சொற்கீரன்

(சங்கநடைச் செய்யுட்கவிதை)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக