வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

அந்த மண்பொம்மை

 எங்கிருந்தோ வந்து

விழுகிற காக்கைச்சிறகு

கையில் 

புல்லாங்குழலாய்

கனக்கிறது.

அதில் இதயம் கனத்த கீதங்கள்

அதிகம்..அதிகம்..

கண்ணா கருமை நிறக்கண்ணா

என்று

அவனை நோக்கி பாடுகிறோம்.

இனிமையும் குளுமையுமாய்

சமர்ப்பணமாய்

அவனை நோக்கிப்பாடுகிறோம்.

காதலின் அமுத மூலைகளும்

அதில் அமிழ்ந்து கிடக்கின்றன.

எளியவர்களின் அவலங்களும்

அவனை நோக்கி

கண்கள் உயர்த்துகின்றன.

அந்த கண்ணீரின் அடர்மழையில்

அந்த மண்பொம்மை

கரைந்தே போகின்றது.

_____________________________________________‍

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக