"லால் சிங் சாத்தா"
___________________________________
அந்த ஒற்றைச்சிறகை
உணர்ச்சியாய் வருடிக்காட்டும்
அமீர்கானின்
புல்லரிக்கச்செய்யும் நடிப்பில்
நட்பின் உயிர்ப்பு
காதலின் துடிப்பு
வாழ்க்கையின்
நுண்ணியத்தோர் வேர்பிடிப்பு
எல்லாம் ஒன்றுகூடி
எல்லாச்சாளரங்களையும்
திறந்து விட்டிருக்கிறது.
ஏ! உலகமே!
இன்னுமா உனக்கு
மூச்சுத்திணறல்?
புறாக்களின் அலகு கவ்வியிருக்கும்
அந்த "போதி"மரத்து இலைகளில்
எல்லாவேட்டுச்சத்தங்களும்
மரித்து விடட்டும்.
_______________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக