ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

தேர்

 இந்த ஆண்டு சுதந்திர விழாக் 

கொண்டாட்டம்

புதுமையானது.

தம் பிடித்து மூச்சு புரி விடாமல் 

இழுக்கவேண்டும்

இந்த தேர் வடத்தை

2024 வரை.

விட்டால்  போச்சு.

இனி தேர்(தல்)இல்லை.

அப்புறம்

சுதந்திரம் என்று பேச்சுக்கும்

இடமில்லை.

"உங்கள் ஓட்டுகள் எல்லாம் வேண்டும்

என்று

யாரும் இங்கே கேட்கவில்லை.

சதவீதக் கணக்கும்

சாதிக்கணக்கும் 

கணினிப்பொறிக்குள்

அடைக்காக்க இங்கே

ஆயிரம் "ஆப்பு"கள் உண்டு."

ஆம்.

ரத்த தாகம் எடுத்த அந்த குள்ளநரிகளின்

தந்திரங்களுக்கு

ஆப்பு வைக்கவேண்டும்.

அதனால்..

உம்ம்ம்.இழுங்கள் தேர்வடத்தை

அந்த ரெண்டாயிரத்து இருபத்து நாலு 

நோக்கி!

மதுரை தேர் பாட்டு கேட்கிறது..

"சோம சுந்தர..

மீனாட்சி சுந்தர..."

கோவில் சிலைகள் 

கல் அல்ல.

நம் கனல்.

சுதந்திரச்செங்கனல்.


___________________________________________

ருத்ரா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக