பிம்பங்கள்
________________________________________
சொற்பொழிவுகள் முடிந்து போயின.
ஓட்டுக்களில் ஜனித்த
சர்வாசுரன் அதோ வந்துவிட்டான்.
மானுடமாவது மண்ணாங்கட்டியாவது
கீழ்ச்சாதிப் புழுக்களை
நசுக்கி கூழாக்கு.
அதுவே அவர்களுக்கு நாம் தரும்
பிரசாதம்.
ராமர்களும் கிருஷ்ணர்களும்
தருகின்ற பித்த மயக்க பிம்பங்களில்
அவர்கள் சுருண்டு கிடக்கட்டும்.
நம்மடவா நன்னா சுருட்டிக்கட்டும்.
இந்த க்ளோபலைசேஷன் மாஜிக் வேண்டு வைத்து
மற்ற நாட்டுக்காராளையும்
வசியம் செய்து கொள்ளலாம்.
நாம் அவாளையே நம்மடவா ஆக்கிண்டுட்டா
நம் சநாதனத்தையே அவாளுக்கும்
தண்ணி காட்டலாம்.
ஏற்கனவே "மேக்ஸ்முல்லர்"ங்கிற
அவாளையே "ரிஷி" ஆக்கி வச்சிருக்கோம்.
சுதந்திரம் எல்லாம்
எப்பவோ இங்கே
அர்த்தம் மாறி விட்டது.
சாதிகள் மதங்களில்
ராட்சதங்களை
சொருகி வைத்துக்கொண்டோம்.
வில்லும் கதாயுதமும் பரசுகளும்
"வஜ்ரா" ஆயுதங்களும்
மற்றும்
"மிஸ்ஸைல்"களும் தான்
நம் தர்ப்பைகள்.
அறிவு என்பது
கடவுளின் முன் அதிகப்பிரசங்கித்தனம்.
கடவுளால்
அக்மார்க் முத்திரை குத்தி கொண்டவர்களே
பள்ளிகளில் நுழையமுடியும்.
நாமே கடவுள்கள் என்று
புரியாத கூச்சல்களில் மந்திரங்கள் ஆக்கி
எல்லோரையும்
நமக்குக்கீழே அமுக்கிக்கொள்ளவேண்டும்.
அதுவே சாஸ்திரங்கள் தர்மங்கள்
என்று "சாதிக்க வேண்டும்"
அதிலிருந்து தான் நம்
ஆதிக்கம்
ஆசிரமம் அமைக்கிறது.
நான்கு வர்ணம் கூட
அதிகம் தான்.
நாமே பிரம்ம புத்திரர்கள் எனும்
முதல் வர்ணம்.
முதல் வர்ணத்துக்கு
அடி வருட தான்
மற்ற மூன்று வர்ணமும்.
"டே அம்பி!
கடவுள்லாம் இல்லேனு
ரகசியமா சொல்லிட்டாடா.
ஆனாலும்
லட்சக்கணக்காய் சுலோகங்கள்
கத்திண்டே இருக்கணும்.
அவா
மிரண்டு கிடந்தா
அதுவே நமக்கு க்ஷேமம்.
பல சகாப்தங்கள்
நமக்கு நீட்டிண்டே இருக்கும்.
சரி..சரி..
அவிட்டம் வர்ரது.
ரினியூ பண்ணிக்கிங்கோ.
பார்த் வர்ஷம் இனி
நம் பஞ்சகச்சத்து முடிச்சிலே தான்.
சுகினோ பவந்து.
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஹி."
__________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக