(1)
எழுபத்தி ஒன்பது ஆண்டுகள்!
இன்னுமா
உன் சுதந்திரத்தை
எழுத்துக்கூட்டி
வாசித்துக்
கொண்டிருக்கிறாய்?
அகர முதல என்று
ஆரம்பிக்கும் போதெல்லாம்
ஆண்டவனை உன் மடியில்
அமர்த்திவிடுகிறார்கள்.
அப்புறம் அந்த
சொர்க்கவாசல் தான்
உன் சோமபானங்கள்.
ஓட்டுக்கள் போட்டு போட்டு
உன் மிச்சமும் எச்சமும்
வெறும் புகை மூட்டமே.
________________________________________
சொற்கீரன்
(2)
நீரிணை.
__________________________________
இயற்கை
கடலில் கூட
உனக்கு வாய்க்கால்
வெட்டித்தந்திருக்கிறது.
அதில் ஏன் இந்த
காட்டுத்தீ?
முதலில் தீக்குச்சி கிழித்தவன்
யார் என்று
மரங்கள
நடத்திக்
கொண்டிருக்கின்றன
ஐ நா கூட்டம்.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக