நீ
ஒரே சிற்பமா?
ஒரு கோடி சிற்பமா?
முதல் உளியில் முதல் சிற்பம்
உன் ஒலியே அது.
உன் ஒளியே அது.
வினாடிகள் தோறும்
உன் பிரசவம்.
நீயே குழந்தை.
நீயே தாய்.
இந்த உலகத்து மண்ணில்
உன் ஒவ்வொரு தடமே தான்
உன் முகம்.
ஒரு நாள் கண்ணாடி
சுக்கு நூறு ஆனது.
உன் மனம் தூள் தூள்.
ஆனால் பிம்பங்கள் மட்டும்
ஆயிரமாய் சிரித்தது.
ஆயிரமாய் அழுதது.
இதே பிறவியில்
இன்னும் உன் பிறவிகள்
ஆயிரம் ஆயிரம் மிச்சம்.
இப்போது உன் கையில்
எத்தனையாவது உளி?
செதுக்கும் முன்னே
சிற்பங்கள் கையில்
ஆயிரம் ஆயிரம்
முகங்கள் காட்டும்.
அகங்களும் காட்டும்.
___________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக