வியாழன், 30 ஏப்ரல், 2026

குடை ராட்டினங்கள்

 

"எக்சிட்போல்" குடை ராட்டினங்கள்

__________________________________________


கணிப்பொறிப் பொட்டிகளே!

காக்கை கல்லைப்போட்டு போட்டு

நீர் மட்டம் உயர்த்தும் கதை தான் இது.

காக்கை கல்லையும் தண்ணீரையும்

ஏமாற்றுவது 

இந்த ஊடகக்காக்கைகள் செய்யும்

தந்திரம் இது.

ஓட்டு போட்டவர்களை

எப்போதும் ஊடகங்களை நோக்கியே

இருக்கச்செய்யும்

ஒரு விளம்பர வேட்டைகளின் 

காட்டு தர்பார் இது.

வாயால் வடை சுடுவது என்று 

சொல்வார்களே.

அதுவும் இது

ஊச வடை நூல் விளையாட்டு

மாத்திரமே

ஒரு நாளைக்கு 24 மணிநேரம்

என்பதை

சவ்வுமிட்டாயாய் இழுத்து

2400 மணி நேரம் போல் ஆக்கும்

ரப்பர் ராஜ்யத்து தந்திரங்கள் இவை.

ஓட்டு போட்டவர்கள் வெளியே

சொல்லக்கூடாது

என்ற "பிரம்மரகசியங்களை"எல்லாம்

மை டப்பா மந்திரவாதி விளையாட்டுகளாய்

அரங்கேற்றுவது தான்

இப்போதைய ஊடகங்களின் வேலை.

கீரியையும் பாம்பையும் மோதவிடுவது போல்

போக்கு காட்டி தொலையட்டும் 

பரவாலில்லை.

பீகார் மகராஷ்ட்ரா மாநிலங்களில்

நடைபெற்ற‌

குரளி அல்லது குட்டிச்சாத்தான் வேலைகள்

பற்றி இந்த ஊடகங்கள்

மூச்சு காட்டவில்லையே.

ஜனநாயகத்பம்தை வெட்டி

கூறு போடும் வேலைகளின்

கோடரிக்காம்புகளாகவும் இருந்து கொண்டு

ஜனநாயகம் காக்க வந்ததாய்

பம்மாத்து செய்யும்

இந்த பளப்பளா வேலைகளால்

நாட்டின் 

அந்த "பத்திரிகை சுதந்திரம்"

ஒரு ஜிகினா கிரீடம் அணிந்து கொண்டு

பொம்மலாட்டங்கள் நடத்துகின்றது.

மக்களே கிளர்ந்தெழுந்து இந்த‌

"பஞ்சு மிட்டாய்"சுற்றும் 

விளையாட்டுகளுக்கு 

முற்றுப்புள்ளி வைத்தால் தான்

உண்டு!

_________________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக