வெள்ளி, 24 ஏப்ரல், 2026

"நரிவெரூ௨த் தலையன்".




வயதுகள் என்ன‌

தீக்குச்சிகளா?

உரசி உரசி 

தீயைப்பற்றிக்கொள்ள?

இள ரத்தம்

முது ரத்தம்

எரிமலைக்கில்லை!

கந்தல் ஆன 

சமுதாயம் 

சீர்ப்பட வேண்டுமென்ற

சிந்தனைக்கு 

இங்கே 

சிக்கிமுக்கிக்

கல்லா வேண்டும்?

பொறி தெறிக்கும்

சீற்றம் கொண்டு

பொய்மைகளைக்

கிழித்தெறியும் 

வாளேந்துமின்.

இளையதற்கும் இளையதாய்

ஒரு யுகம் வேண்டுமா?

கனலேந்தும்

இமையோரக் கனவுகள்

அமைந்தொரு அலைபாயும்

சினம் வேண்டுமா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுமுன்னே

தோன்றிய நம் தொன்மை மொழி

வதை படவும் மிதி படவும்

வீழ்ந்ததென்ன?

நூறில் மூன்றெனக்கணக்கு 

சொன்னார்.

மூண்டு வந்த சூழ்ச்சி வெறி

நம்மையெல்லாம்

மூடிக்கிடக்கும் அந்த‌

அந்த‌

மூடத்தனத்துள் 

புதைத்து விடுமோ?

இன்னும்

௭னக்கு நம்பிக்கை இருக்கிறது.

மூச்சு பிறக்கும் ஆற்றலே 

வெப்பம்.

அந்த வீறு கொண்ட மொழியே

செம்மலை எனும் எரிமலை.

விடியல்களின் ஊற்றே அது.

தமிழின் விழியே நம் ஒளி!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________

"நரிவெரூ௨த்தலையன்"


24.04.2026






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக