திங்கள், 13 ஏப்ரல், 2026

என்னடா?

 



என்னடா?

பொல்லாத வாழ்க்கைன்னு

கைலி கட்டிகிட்டு

பீடியை கடிச்சுகிட்டு

சூப்பர்ஸ்டார் 

எல்லாம் சொல்லிட்டாருப்பா.

ஆனால் 

குரு என்று சொல்லப்பட்டவர் தான்

திணறிக்கொண்டிருக்கிறார்.

ஜபமாலை மணிகளை

உருட்டி உருட்டிய்யா

அந்த "கைலாசத்துக்கு போகணும்?"

சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்னு 

சொல்லிகிட்டு

கொசுவையும் மூட்டைப்பூச்சியையும்

தினம் தினம் 

நூத்துக்கணக்கா

கொன்னுகிட்டு இருக்கோம்

இல்லேன்னா 

அதுகளுக்கு ரத்தம்லாம் குடுக்காமே

அதுகளை பட்டினி போட்டுட்டு

வலைக்குள்ளேப்போய் படுத்துக்கிறோம்.

கொசுக்கடிகள் கூட‌

பிரம்ம சங்கேதம்னு 

எப்போ புரிஞ்சுக்கப்போறோம்?

இப்படியெல்லாம் எழுதி

ப்ரம்ம விச்சாரம் பண்ணிக்கிட்டு

இருக்கோம்!

என்ன‌...இந்த பொல்லாத 

மோக்ஷ சங்கல்பம்?

_______________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக