25.04.26 முக நூலில் "ப்ளூ பெரி" பற்றி
எழுதிய வண்ணதாசன் அவர்களின்
கவிதைப்பழத்தை நான் ருசித்தபோது
எழுதிய கவிதை
____________________________________________
வண்ணதாசன் அவர்களே!
ஆயுளுக்கும் முதல் முறையாக
"ப்ளு பெரி"என்று
குறிபிட்டீர்களே!
ஆங்கிலத்தில் பெயர் சொல்லி
சாப்பிடும் அந்த
சின்ன சின்ன கருநீலப்பழம்
நான் சாப்பிட்ட நவ்வாப்பழத்தை
நினைவூட்டுகிறத்.
அம்பாந்த்ரம் போகும்
ஆத்துப்பாலம் மருத மரத்து
முண்டு தட்டிய பச்சை நிழலில்
கூறு கட்டி வித்துக்கொண்டிருப்பான்.
குடமுருட்டி சங்கரன்கோயில் அருகே
ஆடித்தவசுக்காத்துலே
வரிசையாய் நின்னு
கரு கரு நீலப்பழங்களை
அழகிய கண்விழிகளைப்போல்
தோரணம் கட்டி நின்று கொண்டிருக்குமே.
அப்ப வாங்கி வாய்க்குள்
உதப்பிக்கொண்டிருக்கும்
அந்த நவ்வாப்பழங்கள்
ஏதோ அந்த
குரங்கு_ முதலை_ஆறு_நவ்வாபழம்
கதையை ருசியாக
நாவல் எழுதிக்கொண்டிருக்கும்.
__________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக