ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சொற்கீரன் கவிதைகள் II

 

சொற்கீரன் கவிதைகள்  II

___________________________________


ஜனநாயகம்

___________________________


79 ஆண்டுகளாய் 

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி

வாசித்துக்கொண்டிருக்கிறீர்களே.

பொருள் புரிந்ததா?

இல்லை

பொருட்படுத்தவே

இல்லையா?

____________________________(1)


கிளிக்குகள்.

______________________________


இந்த "பொறிகளின்"

ஆரண்யத்திலா

உங்கள் பொன்மான்கள்?


______________________________(2)


சீட்டுகள்

_______________________________



இந்த அரட்டைக்கிளிகளின்

சீட்டுகளிலா

உங்கள் அரக்கு மாளிகைகளின்

ஜோஸ்யங்கள்?


__________________________________(3)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக