தன் வயதுகளால் (111) காலத்துக்கே
நாமம் போட்டுக்கொண்டிருப்பவரே!
இந்த உலகத்தின் உற்சாக ஊற்றே!
நீங்கள் உலா போக
இன்னும் நூற்றாண்டுகள்
உங்களை ஏந்தி செல்லக்காத்திருக்கின்றன!
நீநீநீ...நீடூழி வாழ்க நீங்கள்!!!!
அந்த நூறுவயதுக்கும்
பின்னே போய்
ஒளிந்து கொண்ட
பதினொரு வயதுச் சிறுமியே!
ஆயிரம் ஆயிரம்
மத்தாபூக்களின்
வெளிச்ச வனமே!
உன் சிரிப்பில் அன்று பூத்த
குறும்பூ
இன்றும் எல்லா
பிரபஞ்சங்களையும்
சுருட்டி மடக்கி
அந்த கை குவிப்பில்
அடையாளம் காட்டும்
அந்த ஆலயதரிசனத்துக்கு
எல்லா ஆலயங்களும்
கை கட்டி காத்துக்கிடக்கின்றன.
_____________________________________
சொற்கீரன்

தீபா வியால் (DEEPA VIYAL)அவர்களின் முகநூல் பதிவு..25.04.26
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக