முகநூல் ஸ்டோரியில் (21.03.26)
கலாப்ரியா அவர்கள் கவிதைக்கு ஒரு கவிதை
_____________________________________________
மழை பெய்த போது
விளையாடிய காகித கப்பல்
மழை பொய்த்த போதும் வருகிறது
பையனுக்கு.
இது கவிதை.
தகப்பனுக்கு
அப்போதும் இப்போதும் வருவது
எரிச்சல் மட்டுமே.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்போது
முன்பு
கவிதையோடு விளையாடியதை
தொலைத்துக்கொள்கிறார்கள்.
தாய் மட்டுமே
தன் குழந்தையோடு
எப்போதும்
விளையாடுகிறாள்.
கலாப்ரியா அவர்களின்
கவிதைக்காமிரா அருமை!
_____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக