வண்ணதாசன் கவிதை / 27.04.26
27.04.26 முகநூலில்
வண்ணதாசன் அவர்கள் எழுதிய
கவிதை ஒன்றில் பூவின்
மகரந்தங்களை அவர் தெறிக்கவிட்டதைப்
பற்றிய கவிதை இது.
______________________________________________
கவிஞனின் கையில்
அந்த கவிதை
கனவு காண்கிறது.
இதழ்களை விரித்துக்காட்டுகிறது.
அங்கே தான் அவன்
சன்னல் திறக்கிறது.
கவிஞனுக்கு அது
அப்போது தான்
எழுதி முடித்த ஒரு
கவிதைத்தொகுப்பு.
வாசக வனங்களில் எல்லாம்
அது
வாசல் தெளித்து கோலம்
போட்டுக்கொண்டே இருக்கிறது.
மொட்டு என்றும்
பூ என்றும்
சருகு என்றும்
உதிர்வு என்றும்
அது பரிமாணங்களை
துகிலுரித்து வேடிக்கை காட்டுவதை
நீங்கள்
பார்த்துக்கொண்டே இருங்களேன்.
யார் வேண்டாம் என்றது?
_____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக